கனவு உலகினரின் முதல்வர் கனவு (அரசியல் Book 1) (Tamil Edition) Kindle Edition

by ராஜ் ப்ரியன் (Author)  Format: Kindle Edition





கனவு உலகினரின் முதல்வர் கனவு




தாங்கள் தினமும் உண்ணும் உணவு பொருட்களின் விலை, ஆட்சியையே மாற்றும் சக்தி கொண்ட வெங்காயத்தின் பின்னுள்ள அரசியல், பெரியார் சொன்ன போங்கடா வெங்காயங்களா என்பதற்கான அர்த்தம் கூட இன்றைய திரைத்துறையினக்கு தெரியாது. திரை ஆளுமைகள் நினைப்பது போல் அரசியல் என்பது சுலபமானதல்ல. ஒரு சாமானிய தொண்டனுக்கு தெரிந்த அரசியல் சதுரங்க விளையாட்டுகள் கூட அரசியல்வாதியாக மாற நினைக்கும், மாறிய நடிகர்களுக்கு தெரியாது. ஆனால் இவர்களின் கனவுயெல்லாம் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதாகவே உள்ளது.
நடிகனால் நாடாள முடியும் என தங்களுக்கு முன்னுதாரனமாக காட்டுவது எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களைத்தான்.
திரைத்துறையில் பெரும் செல்வாக்கோடு இருந்த எம்.ஜி.ஆரின் போட்டி நடிகரான மக்கள் செல்வாக்கு பெற்ற சிவாஜி, இந்தியாவில் திரைத்துறையை சேர்ந்த முதல் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் பேசிய இயக்குநர் டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆரால் வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ், கறுப்பு எம்.ஜி.ஆர் என வர்ணித்துக்கொண்ட விஜயகாந்த், தமிழர்களின் ஏகபிரதிநிதியென சொல்லும் சீமான், தேவர் சாதி இளைஞர்களின் ஆதரவு பெற்ற கார்த்திக், சரத்குமார், நான் எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் எனச்சொல்லும் நடிகர் கமல் ஹாசன், (எம்.ஜி.ஆர் புகழ் பேசி, பின்னர் அரசியலுக்கு வரவில்லை என ஒதுங்கிய ரஜினி) போன்றவர்கள் அரசியலில் முதல்வர் நாற்காலியை தொட முடியாமல் போனதுக்கு காரணம் என்ன? எம்.ஜி.ஆர் திரைத்துறை மற்றும் அரசியலில் மக்களின் மனம் கவர்ந்து வெற்றி பெற்றது எப்படி? என்பது குறித்து எழுதப்பட்ட நூல்...........